பேடிஎம் - வங்கி : பண பரிமாற்றம் நிகழ்த்துவது எப்படி.?
பேடிஎம் ஆப் மூலம் பண பரிமாற்றங்கள் செய்வதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின் கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.இந்தியாவில் ரூ.500/- மற்றும் ரூ.1000/- நோட்டுகள் தடை செய்யப்பட்ட பின்பு இந்தியாவில் பல மக்கள் பணபரிவர்த்தனைக்காக டிஜிட்டல் பண பயன்பாடான பேடிஎம்-தனை அதிகம் பயனப்டுத்த ஆரம்பித்துள்ளனர். மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் பழைய நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியான சில நாட்களுக்குள் பயனர்களுக்கு ஏதுவாக பேடிஎம் நிறுவனம் அதன் தளத்திற்கு ஆயிரக்கணக்கான புதிய வியாபாரிகள் சேர்த்ததும் குறிப்பிடத்தக்கது.
அப்படியாக காய்கறி விற்பவர்களில் இருந்து மளிகை கடைகாரர்கள் வரை பேடிஎம்-ன் பணமில்லா பணப்பரிவர்த்தனை அனைவரையும் சென்றடைந்துள்ளது. இருப்பினும், இன்னும் சிலருக்கு பேடிஎம் வழியாக பணப்பரிவர்த்தனை நிகழ்த்துவது என்பது பற்றிய குழப்பங்கள் நீடிக்கிறது. அப்படியாக ,பேடிஎம் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.? பேடிஎம் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக பேடிஎம் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.? என்பதை பற்றிய 'டிப்ஸ்' தொகுப்பே இது.!
பேடிஎம் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?
1. உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப்பை திறக்கவும் பின்னர் பாஸ்புக் ஐகானை கைதேர்வு செய்யவும்.
2. இப்போது சென்ட் மணி டூ பேங்க் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
3. டிரான்ஸ்பர் ஆப்ஷனை டாப் செய்யவும்.
4. எவ்வளவு பணம், அக்கவுண்ட் வைதிருப்பவரின் பெயர், வங்கி கணக்கு எண், மற்றும் ஐஎப்எஸ்சி கோட் ஆகியவைகளை பதிவிடவும்.
5. இறுதியாக 'சென்ட்' பொத்தானை டாப் செய்யவும்.

பேடிஎம் டெஸ்க்டாப் வலைத்தளம் வழியாக பேடிஎம் வேலட்டில் இருந்து வங்கிக்கு பணம் பரிமாற்றம் செய்வது எப்படி.?
1. பேடிஎம்.காம் வலைத்தளத்தினுள் நுழைந்து உங்கள் கணக்கில் உள்நுழையவும்.
2. திரையின் மேல் வலது பக்கத்தில் உள்ள உங்கள் பெயர் மீது மவுஸ் கர்சரை ரோல் செய்து உங்கள் பேடிஎம் வேலட்டை கிளிக் செய்யவும்.
3. இப்போது விண்டோவில் டிரான்ஸ்பர் டூ பேங்க் ஆப்ஷனை தேர்வு செய்து மற்றும் தேவையான விவரங்கள் டைப் செய்யவும்.
4. இறுதியாக 'சென்ட் மணி' பொத்தானை அழுத்தவும்.

No comments: