உட்கார்ந்த இடத்தில் பணம் இருக்கும் ஏடிஎம்களை அறிந்து கொள்வது எப்படி?
உங்கள் பகுதியில் பணம் நிரப்பப்பட்டு இருக்கும் ஏடிஎம் மையங்களை உட்கார்ந்த இடத்தில் இருந்து கொண்டே அறிந்து கொள்வது எப்படி என பார்ப்போம்.
புதுடெல்லி:
நாட்டில் ஏற்பட்டிருக்கும் பண தட்டுப்பாடு பலரையும் ஏடிஎம் மற்றும் வங்கி வரிசையில் பணம் எடுக்க நிற்க வைத்துள்ளது.
இந்த சூழ்நிலை பொது மக்களை அவதிப்படுத்தினாலும், ஆன்லைன் பண பரிவர்த்தனை சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு நல்ல பலன் அளித்து வருகிறது. விவரம் அறிந்தவர்கள் ஆன்லைன் மூலம் தங்களது பணத் தேவையை முடிந்தளவு சரி செய்து கொள்கின்றனர்.
பேடிஎம் போன்ற தனியார் பண பரிமாற்ற சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக பேடிஎம் சேவைகளில் பல்வேறு அம்சங்களும் வழங்கப்பட்டன. இத்துடன் பேடிஎம் தளம் பலமுறை முடங்கியதும், அதன் ஐஓஎஸ் செயலியில் பிழை என பல்வேறு தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு வந்தன.
இந்நிலையில் எல்லோரும் பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை உட்கார்ந்து இடத்திலேயே அறிந்து கொள்ள ஒரு வழி இருக்கிறது. பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களின் தகவல்களை வழங்க பல்வேறு செயலி மற்றும் இணையத்தளங்கள் களம் இறங்கியுள்ளன. இவற்றை கொண்டு ஏடிஎம் மையங்களில் பணம் இருப்பதை அறிந்து கொள்ள முடியும்.
அப்படியாக பணம் இருக்கும் ஏடிஎம் மையங்களை அறிந்து கொள்ள உங்களின் கூகுள் அல்லது வேறு தேடுபொறி தளத்தில் http://atmsearch.in/ என டைப் செய்யுங்கள். பின் உங்கள் அருகாமையில் இருக்கும் ஏடிஎம் மையங்களை அறிந்து கொள்ள நீங்கள் இருக்கும் இடத்தை பதிவு செய்ய வேண்டும்.
இடத்தை பதிவு செய்ததும் ஏடிஎம்களை தேடுவதற்கு (Search ATM) ஒரு ஆப்ஷனும், ஏடிஎம்களை சேர்க்க (ADD ATM) ஒரு ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இனி பணம் இருக்கும் ஏடிஎம்களை அறிந்து கொள்ள "Search ATM" என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களின் அருகாமையில் இருக்கும் ஏடிஎம்களை அறிந்து கொள்ள முடியும்.
No comments: