பென் டிரைவ்களில் இருந்து வைரஸ்களை அழிப்பது எப்படி?
பென் டிரைவ்களில் இருக்கும் ஷார்ட்கட் வைரஸ்களை அழிப்பது எப்படி என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
கணினி மற்றும் லேப்டாப்களில் இருக்கும் வைரஸ்களை அழிப்பதற்கு பல்வேறு ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் உள்ளன. இவற்றை கொண்டு கணினி, பென் டிரைவ் உள்ளிட்டவற்றில் இருந்து வைரஸ்களை அழிக்க முடியும்.
எனினும் ஷார்ட்கட் வைரஸ் உங்களின் கணினி, யுஎஸ்பி மற்றும் எஸ்டி கார்டு உள்ளிட்டவற்றில் எப்படியோ நுழைந்து விடும். இவை அனைத்து ஃபைல்களையும் ஷார்ட்கட்-ஆக மாற்றிவிடும். சில சமயங்களில் இந்த ஷார்ட்கட் வைரஸ்கள் தரவுகளை மாயமாக்கி விடும்.
இங்கு ஷார்ட்கட் வைரஸ்களை பென் டிரைவில் இருந்து அழிப்பது எப்படி என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்..
முதலில் ஷார்ட்கட் வைரஸ் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்:
ஷார்ட்கட் வைரஸ்கள் இரண்டு வகைப்படுகிறது. முதலாவது டெஸ்க்டாப் ஃபோல்டருக்கு மாற்றி, ஷார்ட்கட் ஐகான்களில் இடதுபுறத்தில் அம்புகுறி காணப்படும். இந்த ஃபைல் பெயர் "shortcut.exe" என நிறைவுபெறும்.
இரண்டாவது வகை உங்களின் யுஎஸ்பி அல்லது பென் டிரைவினை பாதிக்கும். இது உங்களின் தரவுகளை மறைவாக இருக்கும் ஃபோல்டரில் வைத்து shortcut.exe என்ற ஃபைலினை உங்களின் பென் டிரைவில் உருவாக்கும். இந்த பென் டிரைவ்களை கணினியில் திறக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் வைரஸ் உங்களது கணினியில் பரவ துவங்கும்.
மென்பொருள் கொண்டு அழிக்கலாம்:
ஆன்டிவைரஸ் மென்பொருள் கொண்டு ஷார்ட்கட் வைரஸ்களை அழிக்க முடியும். இதற்கு Start → My Computer ஆப்ஷனில் ரைட் கிளிக் செய்து பென் டிரைவினை தேர்வு செய்து "Scan for viruses" ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
கமாண்ட் பிராம்ப்ட் கொண்டு அழிக்கலாம்:
உங்களின் பென் டிரைவில் இருக்கும் வைரஸ்களை கமாண்ட் பிராம்ப்ட் மூலம் நீங்களாகவே அழிக்கலாம். இதை செய்ய Start ஆப்ஷன் சென்று CMD என டைப் செய்ய வேண்டும், பின் CMD ஆப்ஷனில் ரைட் கிளிக் செய்து "Run as Administrator" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின் யுஎஸ்பியின் எழுத்தை டைப் செய்து என்டர் கிளிக் செய்ய வேண்டும்.
அடுத்து del".Ink என டைப் செய்து என்டர் பட்டனை கிளிக் செய்து attrib -s -r -h *.* /s.d/l/ என டைப் செய்து என்டர் கிளிக் செய்ய வேண்டும்.
தரவுகளை பேக்கப் செய்ய வேண்டும்:
பென் டிரைவில் இருந்து வைரஸ்களை அழித்ததும், உங்களுக்கு தேவையெனில் பென் டிரைவினை மீண்டும் ஃபார்மேட் செய்யலாம். மீண்டும் ஃபார்மேட் செய்யும் முன் தரவுகளை பேக்கப் செய்து கொள்ளுங்கள். முடிந்தால் பென் டிரைவினை ஸ்கேன் செய்து தெரிந்திராதவற்றை அழித்து விடுங்கள்.
மீண்டும் ஃபார்மேட் செய்ய வேண்டும்:
பென் டிரைவினை மீண்டும் ஃபார்மேட் செய்ய ஸ்டார்ட் மெனு சென்று cmd என டைப் செய்து /q/x [பென் டிரைவ் எழுத்தை என்டர் செய்து] என்டர் கிளிக் செய்யுங்கள். இவ்வாறு செய்ததும் உங்களின் பென் டிரைவ் ஃபார்மேட் செய்யப்பட்டு விடும்.
No comments: